குரு பெயர்ச்சி (2022 - 2023) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை ஆரோக்கியம் மற்றும் உத்தியோகத்தில் பிரச்சணைகள் (35 / 100)


சனி பகவான் இந்த பெயர்ச்சி காலத்தில் மூன்றாவது முறையாக உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். எதிர்பாராவிதமாக, இது உங்களுக்கு வலி மிகுந்த பாகமாக இருக்கும். உங்கள் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்களுக்கு வயிறு, கல்லீரல், முதுகு மற்றும் கால்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவத்தை எடுத்துக் கொள்வது இந்த காலகட்டத்தில் நல்ல பலனைத் தரும். உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியல் இந்த காலகட்டத்தில் உச்சத்தைத் தொடும். நீங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தால் உங்கள் உத்தியோகத்தை விட்டுவிடலாம் என்றும் நினைப்பீர்கள். உங்களை விட தகுதியில் கீழ் நிலையில் இருப்பவருக்கு உங்களை விட உயர் பதவிக்கு பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் அந்த நபரிடம் ரிப்போர்ட் செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். இந்த பாகத்தில் எந்த விதமான அவசர முடிவுகளையும் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள். இப்போது உங்கள் உத்யோகத்தை நீங்கள் இழக்க நேர்ந்தால் மீண்டும் புது வேலை கிடைக்க 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம்.


தொழில்முனைவோர்கள் எதிர்பாராத பின்னடைவுகளை சந்திப்பார்கள். உங்கள் வாடிக்கையாளர், தொழில் பங்குதாரர் மற்றும் உங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போகலாம். நீங்கள் ஒவ்வொரு நாளும் பணத்தை இழந்து கொண்டே போவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். நீங்கள் எதை செய்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்படுவது நல்லது.


Prev Topic

Next Topic