குரு பெயர்ச்சி (2022 - 2023) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

வேலை / உத்தியோகம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். சனி பகவான் உங்கள் ஜென்ம ஸ்தானத்திலும், குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்கள் நிலை மிகவும் மோசமானதாக இருக்கலாம். நீங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியல், வேலை அழுத்தம் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் உயர் மேலாளர் உங்களது செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடையமாட்டார். மேலும் நீங்கள் ரிப்போர்ட் செய்யும் மேலாளர் உங்களுக்கு எதிராக செயல்படுவார். உங்களது நேரடி ரிப்போர்ட்டில் இருந்து உங்களுக்கு எந்த நல்ல பின்னூட்டமும் கிடைக்காமல் போகலாம்.


ப்ராஜெக்ட் தோல்வியடைந்தால், அதற்கு நீங்கள் குற்றம் சாட்டப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், அக்டோபர் 2022 முதல் பெப்ரவரி 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் ஏற்படலாம். ஒப்பந்தம் ரீதியாக நீங்கள் வேலை பார்கின்றீர்கள் என்றால், 2022 ஆண்டின் இறுதியில் அது இரத்தாகலாம். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் வெளிநாட்டிற்கு குடி பெயரும் முயற்சியையோ அல்லது வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியையோ தவிர்த்துவிட வேண்டும்.
இடமாற்றம், அல்லது குடியேற்றப் பலன்கள் போன்ற பலன்களை உங்களால் உங்கள் நிறுவனத்தில் இருந்து பெற முடியாமல் போகலாம். நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு உங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பாகம் இரண்டில் உங்களுக்கு பிரச்சனைகள் சற்று குறைவாக இருப்பதால் ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம்.

Prev Topic

Next Topic