![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
தொழில்முனைவோர்கள் எதிர்பாராத பின்னடைவுகளை சந்திப்பார்கள். உங்களுக்கு குருவால் கிடைத்த நிவாரணம் முடிவுக்கு வரும். அஷ்டம சனியின் தாக்கத்தை மிகவும் மோசமாக பாகம் 1, 3 மற்றும் 4 இல் உணருவீர்கள். உங்கள் மறைமுக எதிரிகள் உண்டாக்கிய உங்களுக்கு எதிரான சதியால் நீங்கள் பாதிக்கபப்டுவீர்கள். குரு உங்களுக்கு நிதி பிரச்சணைகளை ஏற்படுத்துவார். மேலும் பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம்.
உங்கள் வணிக பங்குதாரருடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் உங்கள் நிர்வாக செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் சந்தைப்படுத்தல் செலவுகள் வீணாகலாம். உங்கள் வணிகம் அரசு கொள்கைகளால் பாதிக்கபப்டலாம். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் நிதி நிலையில் கடுமையான நேரத்தை சந்திப்பார்கள். ரியல் எஸ்டேட் ப்ரோஜெக்ட்டுகள் மற்றும் முதலீடு செய்யும் சொத்துக்களில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்கள் பிரச்சனையின் தாக்கம் பெப்ரவரி 2023 முதல் சற்று குறையும். நீங்கள் எதை செய்தாலும் அதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்கள் நிதி நிலையில் புதிதாக எந்த முடிவை எடுக்க வேண்டும் என்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.
Prev Topic
Next Topic