குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை நல்ல முன்னேற்றம் (55 / 100)


நீங்கள் அஷ்டம சனியின் மிகவும் கடுமையான காலகட்டத்தை கடந்து விட்டீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள்! இப்போது சனி பகவான் மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரித்து குருவால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களை குறைப்பார்கள். சமீப கடந்த நாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளில் இருந்து நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள்.
உங்கள் தன்னம்பிக்கை அளவும் ஆற்றலின் அளவும் அதிகரிக்கும். கடந்த நாட்களில் உங்கள் வாழ்க்கையில் நடந்த மோசமாக நிகழ்வுகளை சீரணிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். மிதமான வேலை பளுவும் பதற்றமும் இருக்கலாம். ஆனால் இந்த பாகத்தில் உங்களால் அதனை எளிமையாக சமாளித்து விட முடியும். உங்களால் இப்போது அலுவலகத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. ஆனால் உங்கள் உத்தியோகம் பாதுகாப்பாக இருக்கும்.


உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வங்கிக் கடன்கள் நல்ல வட்டி விகிதத்தில் ஒப்புதல் பெரும். இருப்பினும் சுப காரியங்கள் நிகழ்த்த வேண்டும் என்றால், நீங்கள் மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் குடியேற்றப் பலன்கள் சார்ந்த விடயங்களில் நலல் முன்னேற்றத்தை காண்பீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் இருந்து விலகி இருங்கள். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் பணத்தை முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் இல்லை.


Prev Topic

Next Topic