குரு பெயர்ச்சி (2022 - 2023) உடல்நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

உடல்நலம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022


பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023

சாதகமற்ற குரு, சனி பகவான் மற்றும் கேதுவால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். நீங்கள் அஷ்டம சனி நடை பெறுவதால் தூக்கம் இல்லாத இரவுகளை கடக்க நேரலாம். உங்கள் மனக் கவலை மற்றும் பதற்றம் கேது உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அதிகரிக்கலாம். குரு உங்கள் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, வயிற்றிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நல பிரச்சனை மோசமாகலாம், மேலும் அதனை சரி செய்வது உங்களுக்கு கடினமாகலாம்.


சிறிய வேலை செய்தாலும் நீங்கள் விரைவில் சக்தி இழந்து விடுவீர்கள். திட உணவுகளுக்கு பதிலாக அதிக பழங்களை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலமும் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். தினமும் காலையில் ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் நீங்கள் அதிக பலத்தை பெறலாம்.

Prev Topic

Next Topic