![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2022 - 2023 மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (Gemini Moon Sign)
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
கடந்த குரு பெயர்ச்சியில் குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரித்த போது நீங்கள் நல்ல மாற்றங்களைப் பெற்றிருப்பீர்கள். இப்போது, குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிற்கு சாதகமற்ற நிலைக்கு பெயர்ச்சியாகிறார். மேலும் பாகம் 1, 3 மற்றும் 4 இல் அஷ்டம சனியின் பாதகமான தாக்கத்தையும் நீங்கள் உணருவீர்கள். ராகு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நண்பர்கள் மூலம் உதவிகளை செய்வார்கள். ஆனால் கேது உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துவார்.
உங்களுக்கு உடல் உபாதைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயிற்றில் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்திலும் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. நிதி நிலை மற்றும் முதலீடுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அக்டோபர் அல்லது நவம்பர் 2022 வாக்கில் நீங்கள் அதிக பணத்தை இழக்க நேரலாம்.
எதிர்பாராவிதமாக பாகம் 1, 3 மற்றும் 4 இல் நீங்கள் கடுமையான சோதனை காலத்தை சந்திப்பீர்கள். உங்களுக்கு பாகம் 2 மற்றும் 5 இல் சற்று நிவாரணம் கிடைக்கும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்யலாம், மேலும் விஷ்ணு சஹாசார நாமம் கேட்டு நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic