![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | இரண்டாம் பாகம் |
ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை கலந்த பலன்கள் (55 / 100)
குரு மற்றும் சனி பகவான் இந்த பாகத்தில் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்களால் உங்கள் குடும்பத்தினர்கள், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிட முடியும். மேலும் இந்த பாகத்தை நீங்கள் நிம்மதியாக கடப்பீர்கள். ராகு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பயணம் உங்களுக்கு கலந்த பலனைத் தரும். நீங்கள் புண்ணிய தளங்களுக்கு பயணம் செய்ய திட்டமிடலாம்.
உங்கள் வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும். ஆனால், மறைமுக அரசியல் இருக்கும், அதனை உங்களால் உணர முடியாமல் போகலாம். தொழில்முனைவோர்கள், எந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் இல்லாமல் மந்தமான ஒரு காலகட்டத்தை உணருவார்கள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் கட்டுமான ப்ரோஜெக்ட்டுகள் செய்து கொண்டிருந்தால், அது நிறுத்தப்படலாம். உங்களுக்கு முதலீடு செய்யும் சொத்துக்களில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic