குரு பெயர்ச்சி (2022 - 2023) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

வேலை / உத்தியோகம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022


பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023

தற்போது நிகழும் குரு பெயர்ச்சி உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இல்லை. சனி பகவான் உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் சஞ்சரித்து அலுவலகத்தில் அரசியல், வேலை பளு, அழுத்தம் மற்றும் பதற்றத்தை உண்டாக்கு உங்கள் உத்தியோக வாழ்க்கையை பாதிப்பார்கள். உங்கள் செயல்திறனைப் பார்த்து உங்கள் உயர் மேலாளர் மகிழ்ச்சி அடையமாட்டார். மேலும் உங்களால் நீங்கள் ரிப்போர்ட் செய்யும் உங்கள் மேலாளரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் போகலாம். உங்கள் நேரடி அறிக்கையில் இருந்து எந்த நல்ல பின்னூட்டத்தையும் உங்கள் பெற முடியாமல் போகலாம்.


ப்ராஜெக்ட் தோல்வி அடைந்ததற்கு நீங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுவீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் நவம்பர் 2022 வாக்கில் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலும் ஏற்படலாம். உங்கள் ஒப்பந்தம் மீண்டும் புதுபிக்கப்படாமல் போகலாம். புது வேலை வாய்ப்புகளுக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை. மேலும் வெளிநாட்டிற்கு அல்லது வேறு மாநிலத்திற்கு குடி பெயரும் முயற்சிகளை நீங்கள் தவிர்த்துவிட வேண்டும்.
இடமாற்றம், குடிப்யீர்தல், அல்லது குடியேற்றம் போன்ற எந்த பலனையும் உங்கள் நிறுவனத்தில் இருந்து நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் வாழ்வாதாரத்திற்காக உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பாகம் 2 இல் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறைவாக இருக்கும்.

Prev Topic

Next Topic