![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
தொழில்முனைவோர்கள் குரு மற்றும் சனி பகவான் கடந்த பெயர்ச்சி காலத்தில் நல்ல நிலையில் சஞ்சரித்ததால் நல்ல அதிர்ஷ்டங்களை பெற்றிருப்பார்கள். தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் அதிக சவால்களை சந்திப்பீர்கள். உங்கள் மறைமுக எதிரிகளும் போட்டியாளர்களும் அதிக பலம் பெறுவார்கள். நவம்பர் 23, 2022 வரை சனி பகவானிடம் இருந்து உங்களுக்கு சில ஆதருவுகள் கிடைக்கும். நீங்கள் நவம்பர் 23, 2022 க்குள் உங்கள் லாபத்தை பாதுகாத்துக் கொண்டு ரிஸ்க் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.
அஷ்டம குருவின் உண்மையான தாக்கத்தை நவம்பர் 23, 2022 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் காண்பீர்கள். உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். நீங்கள் உங்களுக்கு எதிரான சதியால் உங்களுக்கு கிடைத்துள்ள நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகளை இழக்க நேரலாம். மேலும் உங்களது காப்புரிமையையும் நீங்கள் இழக்க நேரலாம். உங்களது புதுமையான யோசனைகள் மற்றும் வர்த்தக இரகசியங்கள் இந்த காலகட்டத்தில் திருடப்படலாம். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் பங்குதாரர்கள், போட்டியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுடன் உங்களுக்கு கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், உங்களுக்கு அவப்பெயர் ஏற்படலாம். இதனால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். பண விடயங்களில் நீங்கள் மிகவும் மோசமாக ஏமாற்றப்படலாம். மேலும் உங்கள் நிர்வாக செலவுகளை சமாளிக்க நீங்கள் உங்கள் அசையா சொத்துக்களை விற்க நேரலாம் அல்லது அதிக பணத்தை கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். பெப்ரவரி மற்றும் மார்ச் 2023 வாக்கில் உங்கள் வங்கிக் கணக்கு திவாலாக வாய்புகள் உள்ளன, இதனால் உங்கள் வணிகம் பாதிக்கப்படலாம்.
Prev Topic
Next Topic