![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
உங்கள் நிதி நிலை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருந்திருக்கும். ஆனால் குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏறப்டலாம். உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். விடயங்கள் நவம்பர் 23, 2022 வரை முதல் பாகங்களுக்கு சமாளிக்கும் விதத்தில் இருக்கும். ஆனால் பாகம் 4 மற்றும் 5 இல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் அல்லது உறவினர்கள் மூலம் நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப்படலாம். இது உங்கள் நிதி சுமையை மேலும் அதிகரிக்கலாம். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் வங்கிக் கடன் அல்லது நிதி மறு பரிசீலனைக்கான விண்ணப்பம் ஒப்புதல் பெறாமல் போகலாம்.
2023 இன் தொடக்கத்தில் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதால் நீங்கள் புது வீடு வாங்கும் முயற்சியை தவிர்த்துவிடுவது நல்லது. மேலும் அதிர்ஷ்ட சீட்டு அல்லது சூதாட்டம் போன்றவற்றில் உங்கள் அதிர்ஷ்டங்களை முயற்சி செய்து பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. பயணத்தின் போது திருட்டு நடக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் சொத்துக்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பாதுகாக்க போதிய காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். நவம்பர் 23, 2022 முதல் ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்துவிட வேண்டும்.
Prev Topic
Next Topic