![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2022 - 2023 சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து கடந்த ஒரு ஆண்டு காலமாக உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தந்திருப்பார். சனி பகவானும் உங்களுக்கு சாதகமான இடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான வளர்ச்சி மற்றும் வெற்றியை தந்திருப்பார். குரு இப்போது உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவது சாதகமான செய்தி அல்ல. சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை உங்களுக்கு துணையாக இருந்து குருவினால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களில் இருந்து பாதுகாப்பார்.
ஆனால் சமீப கடந்த நாட்களில் நீங்கள் பெற்ற அதே அதிர்ஷ்டங்களை இப்போது எதிர்பார்க்க முடியாது. சதி மற்றும் உங்களுக்கு எதிரான அரசியலால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் வளர்ச்சி உங்களுக்கு எதிரான பொறாமை மற்றும் தீய கண்களால் பாதிக்கப்படலாம். அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு நீங்கள் முதலீடுகள் செய்து ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் அக்டோபர் 2022 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தரும்.
பாகம் 1 இல் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். பாகம் 2 மற்றும் 3 இல் ஓரளவு உங்களுக்கு நல்லப் பலன்கள் ஏற்படலாம். கடைசி இரண்டு பாகங்களும் உங்களுக்கு மோசமாக இருக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்படலாம். மேலும் ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு அவப்பெயர் ஏற்படக்கூடிய சூழும் கடைசி பாகத்தில் ஏற்படலாம். மூச்சு பயிற்சி செய்து, விஷ்ணு சஹாசார நாமம் கேட்டு நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.
Prev Topic
Next Topic