![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | இரண்டாம் பாகம் |
ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை மிதமான முன்னேற்றம் (55 / 100)
குரு மற்றும் சனி பகவான் இந்த பாகத்தில் வக்கிர கதி அடைவார்கள். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சீரணிக்க நேரம் கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து சரியான மருந்து கிடைத்து அதில் இருந்து வெளியில் வருவீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். காதலர்கள் மற்றும் திருமணம் ஆன தம்பதியினர் தங்கள் பிரச்சனைகளை பற்றி பேசி நலல் தீர்வுக் காண முயற்சிப்பார்கள். இதனால் உங்கள் உறவுகளும் சுமூகமாக தொடரும்.
உங்கள் வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும். நீங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கின்றீர்கள் என்றால், அது உங்கள் பிறந்த சாதகத்தின் உதவியோடு கிடைக்கும். தொழில்முனைவோர்கள் இந்த பாகத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். உங்கள் நிதி நிலையில் பெரும் ஆளவு முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் கடனை மிகவும் விரைவாக அடைத்துவிடுவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் இந்த பாகத்தில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்ய முயற்சிக்கலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic