![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | மூன்றாம் பாகம் |
அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை நல்ல அதிர்ஷ்டங்கள் (80 / 100)
இந்த குரு பெயர்ச்சி காலத்திலேயே இது உங்களுக்கு மிகவும் சிறந்த ஒரு பாகமாக இருக்கும். உங்களுக்கு இந்த பாகத்தில் நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். உங்களது பல ஆண்டு ப்ரோஜெக்ட்டுகள் இறுதி கட்டத்திற்கு வந்து பெரும் அளவு வெற்றியையும் தரும். உங்களுக்கு பெரும் அளவு பண வரத்தும் புகழும் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வுக்கு காத்திருந்தால், அது இப்போது உங்களுக்கு கிடைக்கும். சுப காரியங்கள் நிகழ்த்த இது நல்ல நேரம்.
இந்த பாகம் 5 வாரங்களுக்கு மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால், அதைச் செய்ய இது நல்ல நேரம். புது வீடு வாங்கி குடி பெயரும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் வீட்டுக் கடனை நிதி மறு பரிசீலனை செய்யும் முயற்சியைச் செய்ய இது நல்ல நேரம். நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
நவம்பர் 21, 2022 க்கு முன் நீங்கள் ரிஸ்க் எடுப்பதை குறைத்துக் கொண்டு பங்குகளில் முதலீடு செய்வதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அடுத்த 6 மாதங்களுக்கு இது வரை சேர்த்து வைத்த உங்கள் லாபத்தை பாதுகாப்பான முதலீடுகளில் போட்டு வைப்பது நல்லது. தொழில்முனைவோர்களுக்கு பாதுகாப்பாக வெளியேறவும் ரிஸ்க்கை குறைத்துக் கொள்ளவும் இது சரியான தருணமாக இருக்கும்.
Prev Topic
Next Topic