![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
கடந்த ஆண்டு உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியும் அதிர்ஷ்டங்களும் கிடைத்திருந்திருக்கும். குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 13, 2022 அன்று பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு இருந்த ராஜ யோகா காலம் முடிவடைகிறது. சனி பகவானிடம் இருந்து பாகம் 1, 2 மற்றும் 3 இல் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் அதிக வேலை பளுவும் அரசிலும் இருக்கும். ஆனால் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், அக்டோபர் 2022 வாக்கில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குரு உங்களுக்கு பிரச்சனைகளைத் தந்தாலும், சனி பகவான் நவம்பர் 23, 2022 வரை உங்களுக்கு அதற்கான தீர்வுகளை வழங்குவார்.
ஆனால் நவம்பர் 23, 2022 முதல் ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு பெரிய அளவு இறக்கம் ஏற்படலாம். நீங்கள் உங்கள் மேலாளரால் துன்புறுத்தப்படலாம். யாரைப்பற்றியும் நீங்கள் பேசுவதை தவிர்த்துவிடுங்கள், ஏனென்றால் அதுவே உங்கள் நிலையை மேலும் மோசமாக்கிவிடலாம். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். மறைமுக எதிரிகளால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவீர்கள். 2023 இன் தொடக்கத்தில் உங்கள் மீது குற்றம்சாட்டப்படலாம்.
நீங்கள் பெண்கள் மற்றும் உங்களை விட இளம் வயதினருடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் மேலாளரிடம் இருந்து உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் யாருடமும் மிகவும் நெருங்கிய நட்போடு பழகினார், அது உங்கள் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கிவிடலாம். நீங்கள் டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் செல்வாக்கு மற்றும் உத்தியோகத்தை இழக்க நேரலாம். மேலும் உங்களுக்கு அவப்பெயரும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த குரு பெயர்ச்சியின் இறுதி பாகத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic