குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை உடல்நலம் மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகள் (30 / 100)


உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் இப்போது அர்தஷ்டம சனியில் இருந்து வெளியில் வந்துவிட்டீர்கள் என்பது தான். ஆனால் குரு மற்றும் ராகு தொடர்ந்து உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் கடந்த பாகத்தை விட இப்போது குறைவாகவே இருக்கும். நீங்கள் உங்கள் உடல்நல பிரச்சனைகளுக்கு சரியான மருத்துவம் கிடைத்து குணமடைவீர்கள்.
உங்கள் உறவுகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காமல் இருக்கலாம். திருமணம் ஆன தம்பதியினர் கடுமையான காலகட்டத்தை சந்திப்பார்கள். காதலர்கள் பிரியும் சூழலில் இருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணமும் இரத்தாகலாம்.


நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், இப்போது தற்காலிகமாக உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும். ஆனால் முன்பு பார்த்த வேலையை விட இப்போது உங்களுக்கு சம்பளம் குறைவாகவே இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த தற்காலிக வேலையை ஏற்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை முடிக்க நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
உங்கள் அலுவலகத்தில் எந்த வளர்ச்சியையும் இப்போது உங்களால் எதிர்பார்க்க முடியாது. உங்களிடம் இப்போது ஒரு நல்ல உத்தியோகம் இருந்தால், நீங்கள் அதனால் மகிழ்ச்சி அடையலாம். உங்களுக்கு இருக்கும் கடன்களில் இருந்து வெளிவருவதில் உங்களுக்கு கடினமான நேரம் நிலவலாம். உங்களக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையே உங்கள் வட்டி விகிதம் தான். நீங்கள் அதிக பணத்தை அசலை கட்ட பயன்படுத்துவதை விட வட்டிக்கு அதிகம் செலவிடுவீர்கள்/ பங்குசந்தை வர்த்தகம் செய்வதையும் முதலீடுகளில் ரிஸ்க் எடுப்பதையும் தவிர்த்துவிடுங்கள்.


ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு குரு ராகுவுடன் இணைந்து உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது நீங்கள் ஒரு நல்ல நிவாரணத்தையும் நல்ல மாற்றத்தையும் காண்பீர்கள்.

Prev Topic

Next Topic