![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | முதல் பாகம் |
ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை மனக் கவலைகள் (40 / 100)
குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் இந்த காலகட்டத்தில் சஞ்சரிப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் இருந்து 5 ஆம் வீட்டிற்கு அதி சரமாய் ஏப்ரல் 27, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார். அதன் பிறகு ஜூன் 4, 2022 அன்று வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிற்கு ஜூலை 14, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார்.
உங்கள் உடல் நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும். எந்த ஒரு எச்சரிக்கை அறிகுறிகளையும் கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம். நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியைப் பெற முயற்சிக்க வேண்டும். மேலும் மனக் கவலை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவுகளால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள். உங்களால் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். காதலர்கள் கசப்பான அனுபவங்களை கடக்க நேரலாம். புது உறவைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்துவிட வேண்டும்.
அலுவலகத்தில் வேலை பளுவும் அரசியலும் அதிகமாக இருக்கும். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும் உங்களால் உங்கள் முதலாளியை மகிழ்ச்சி அடையச் செய்ய முடியாது. நீங்கள் வேலை பார்க்கும் ப்ராஜெக்ட் தோல்வி அடைந்தாள், அதற்கு நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள். நீங்கள் உங்கள் வேலையை சரியாக முடித்திருந்தால், அதற்கு உங்களுடைய கடின உழைப்பிற்கான பலனை உங்களுடன் வேலை பார்க்கும் பிற ஊழிவர்கள் எடுத்துக் கொள்வார்கள். கடைசி நிமிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போவதால் நீங்கள் ஏமாற்றம் அடைய நேரலாம்.
உங்கள் செலவுகளை சமாளிக்க நீங்கள் அதிக வட்டி விகிதத்திற்கு பணம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்கள் வங்கிக் கடன்கள் நிராகரிக்கப்படலாம். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபம் தராமல் போகலாம். உங்களுக்கு ஏற்படும் தோல்வி மற்றும் ஏமாற்றங்களால் நீங்கள் மிகவும் பாதிக்கப்படுவீர்கள். முடிந்த வரை யாருக்கும் பணம் கடன் தருவதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்துவிடுங்கள்.
Prev Topic
Next Topic