![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரை கடுமையான சோதனை காலம் (15 / 100)
எதிர்பாராவிதமாக, குரு பெயர்ச்சியில் இந்த பாகம் உங்களுக்கு ஒரு மிகவும் மோசமான காலகட்டமாக இருக்கும். அனைத்து முக்கிய கிரகங்களும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு எதிராக சஞ்சரித்து உங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்துவார்கள். நீங்கள் உங்கள் உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இப்போது உடல்நலம், குடும்பம் அல்லது உறவுகளை நீங்கள் இழந்து விட்டால், மீண்டும் அதனை பெற முடியாமல் போய்விடலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். தொலைதூர பயணம் மற்றும் இரவு நேரம் வாகனம் ஓட்டுவதை தவிர்த்துவிடுங்கள்.
எந்த பலனும் இன்றி நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். மேலும் உங்களுக்கு அதிகரிக்கும் கடன்கள் உங்களை பீதி அடையச் செய்யும் நிலைக்கு தள்ளிவிடலாம். உங்கள் அலுவலகத்திலும் சமூக வாழ்க்கையிலும் நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்படலாம். உங்களிடம் ஏற்கனவே இருப்பவற்றை உங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றால், அதுவே இந்த பாகத்தில் உங்களுக்கு ஒரு பெரிய சாதனையாக இருக்கும். புகை அல்லது மது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் வங்கியில் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்துவிடுங்கள். கட்டிடம் கட்டுவது அல்லது நிலம் வாங்குவது, வீடு வாங்குவது அல்லது சொத்துக்களில் முதலீடு செய்வது போன்ற எதையும் இந்த காலகட்டத்தில் தவிர்த்துவிடுங்கள். பங்குசந்தை வர்த்தகம் அல்லது ஸ்பெகுலேடிவ் போன்ற எதையும் தவிர்த்துவிடுவது நல்லது.
கடவுள் வழிபாடு மற்றும் தியானம் செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic