குரு பெயர்ச்சி (2022 - 2023) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

காதல்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

ஜனவரி 202௦ முதல் சனி பகவான் உங்களுக்கு சாதகமற்ற நிலையிலேயே சஞ்சரிகின்றார். அர்தஷ்டம சனியினால் ஏற்பட்ட பிரச்சனைகள் குருவின் சாதகமான நிலைப்பாட்டால் குறைவாக இருந்திருக்கும். இப்போது, குருவும் உங்கள் ராசியின் 6 ஆம் வீடான ருன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவது நல்ல செய்தியாக இல்லை. நீஎங்கள் காதலிப்பவருடன் தேவையற்ற வாக்குவாதங்கள், சண்டைகள் போன்றவற்றில் ஈடுபட நேரலாம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பிரிய நேர்ந்தால் அதனால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். புது உறவைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை.


நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், அதற்கான முயற்சிகளை செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. எனவே மே 2023 வரை காத்திருந்து அதன் பின்னர் நீங்கள் திருமண முயற்சிகளைச் செய்யலாம். திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சி குறைந்து இருப்பார்கள். நீங்கள் IVF அல்லது IUI போன்ற மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், அது உங்களுக்கு எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம். அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு நீங்கள் குழந்தை பேருக்கான திட்டத்தை செய்வது நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் உடல்நல பிரச்சனையால் குழந்தைப் பேறுக்கான உங்கள் முயற்சியில் தாமதங்கள் ஏற்படலாம்.

Prev Topic

Next Topic