குரு பெயர்ச்சி (2022 - 2023) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

2022 – 2023 துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் (Libra Moon Sign).


குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சமீப கடந்த நாட்களில் சஞ்சரித்ததால், நீங்கள் நலல் மாற்றங்களை பெற்றிருப்பீர்கள். அர்தஷ்டம சனியின் தாக்கமும் பெரும் அளவு குறைந்து இருக்கும். எதிர்பாராவிதமாக. குரு இப்போது உங்கள் ராசியின் 6 ஆம் வீடான ருன ரோக சத்ரி ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி உங்களுக்கு அதிக தடைகளை ஏற்படுத்துவார். மேலும் விடயங்களை மோசமாக்கும் விதமாக, ராகு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் உபாதைகளையும் உங்கள் வாழ்க்கைத்துனையுடன் பிரச்சனைகளையும் ஏற்படுத்துவார். கேது உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல மனோ பலத்தையும், ஞானத்தையும் இந்த சோதனை காலங்களில் தருவார்.
அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். உங்கள் உடல் நலமும் பாதிக்கப்படலாம். உங்கள் குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை பாதிக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். நீங்கள் நவம்பர் 2022 வாக்கில் உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப்படலாம். சட்ட சிக்கல்கள் மற்றும் வருமான வரி பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை பாதிக்கும்.
பாகம் 2 இல் ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் நல்ல நிவாரணத்தைப் பெறுவீர்கள். மற்ற பாகங்களில் நீங்கள் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்திக்க நேரலாம். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். மூச்சு பயிற்சி செய்து விஷ்ணு சஹாசார நாமம் கேட்பதால் நேர்மறை சக்திகளை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம்.

Prev Topic

Next Topic