![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | இரண்டாம் பாகம் |
ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை சற்று நிவாரணம் (60 / 100)
குரு மற்றும் சனி பகவான் இந்த பாகத்தில் வக்கிர கதி அடைவார்கள். நீங்கள் இந்த பாகத்தில் தற்காலிகமாக சற்று நிவாரணம் பெறுவீர்கள். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாகத்தில் உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் சற்று சரியாகத் தொடங்கும். உங்களது இந்த கடினமான நேரத்தை கடக்க ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனையைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் பிரச்சனையின் தாக்கம் குறையும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். ஆனால், எந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை.
சட்ட சிக்கல்களில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் வேலை அழுத்தம் மிதமாக இருக்கும். நிதி நிலையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. ஆனால் அது மோசமும் ஆகாது. நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் பெரும் விடயங்களில் நீங்கள் சில முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் மாதாந்திர தவணையை குறைத்துக் கொள்ள நீங்கள் உங்கள் கடனை நிதி மறுபரிசீலனைச் செய்ய முயற்சிக்கலாம. எந்த ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் இருந்தும் விலகி இருப்பது நல்லது. உங்கள் பங்கு நிலைகளை நீங்கள் இப்போது மூடிவிடுவது நல்லது. ஆனால் பங்குச்சந்தை முதலீடுகளில் அதிக பணத்தை போடுவது நல்ல யோசனையாகவும் இருக்காது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic