குரு பெயர்ச்சி (2022 - 2023) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை அலுவலகத்தில் அரசியல் (35 / 100)


இந்த பாகத்தில் அர்தஷ்டம சனியின் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கலாம். உங்கள் உடல்நலம் மிகவும் மோசமாக போகலாம். உங்களுக்கு வயிறு, கல்லீரல், முதுகு அல்லது கால்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் ஆயுர்வேதம் அல்லது சித்த வைத்தியம் செய்து கொள்வதால் அதிக நற்பலனைப் பெறலாம். உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியல் உச்சத்தை தொடும். நீங்கள் உங்களுக்கு ஏற்படும் அவமானங்களால் உத்தியோகத்தை விட்டுவிடலாம் என்றும் கூட நினைப்பீர்கள். உங்களை விட தகுதி குறைந்த ஊழியர்கள் உங்களை விட அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெறுவார்கள். மேலும் அவர்களிடம் நீங்கள் ரிபோர்ட் செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். எந்த அவசர முடிவுகளையும் நீங்கள் இப்போது எடுப்பதை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் இப்போது உங்கள் உத்தியோகத்தை இழக்க நேர்ந்தால், மீண்டும் புது வேலை கிடைக்க 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம்.


தொழில்முனைவோர்கள் எதிர்பாராத பின்னடைவுகளை சந்திப்பார்கள். உங்கள் வாடிக்கையாளர்கள், வணிக பங்குதாரர்கள், மற்றும் ஊழியர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கத் தொடங்கும். நீங்கள் நாளுக்கு னால் பணத்தை இழந்து கொண்டே போவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். நீங்கள் எதைச் செய்தாலும், அதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.


Prev Topic

Next Topic