குரு பெயர்ச்சி (2022 - 2023) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

வேலை / உத்தியோகம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது நிகழும் குருபெயர்ச்சி சிறப்பாக இல்லை. சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் குரு 6 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து அலுவலகத்தில் நடக்கும் அரசியல், வேலை பளு மற்றும் பதற்றத்தால் உங்கள் உத்தியோக வாழ்க்கையை பாதிபார்கள். உங்கள் உயர் மேலாளர் உங்கள் செயல்திறனைப் பார்த்து மகிழ்ச்சி அடைய மாட்டார். நீங்கள் ரிப்போர்ட் செய்யும் மேலாளர் உங்களுடன் சண்டையில் ஈடுபடலாம், உங்கள் நேரடி ரிப்போர்ட்கள் உங்களுக்கு நல்ல பின்னூட்டத்தை தராமல் போகலாம்.


ப்ராஜெக்ட் தோல்வி அடைந்தாள் நீங்கள் அதற்கு பலி சுமத்தப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் அக்டோபர் 2022 முதல் பெப்ரவரி 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் ஏற்படலாம். உங்கள் பணி ஒப்பந்தம் 2022 இன் இறுதியில் இரத்து செய்யப்படலாம். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் வெளிநாட்டிற்கு அல்லது வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியை தவிர்த்துவிடுவது நல்லது.
இடமாற்றம், வெளிநாட்டிற்கு செல்வது அல்லது குடியேற்றப் பலன்கள் போன்ற எந்த பலனையும் உங்கள் நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்க முடியாது. நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு உங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்களுக்கு பாகம் 2 இல் மட்டுமே சற்று நிவாரணம் கிடைக்கும்.

Prev Topic

Next Topic