குரு பெயர்ச்சி (2022 - 2023) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

தொழில்முனைவோர்கள் குரு மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்ததல் நல்ல அதிர்ஷ்டன்களைப் பெற்றிருப்பார்கள். ஜென்ம குருவால் நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரலாம். உங்கள் மறைமுக எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் பலம் பெறுவார்கள். நவம்பர் 23, 2022 வரை உங்களுக்கு சனி பகவானிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். நவம்பர் 23, 2022 வாக்கில் நீங்கள் உங்கள் லாபத்தை பணமாக்கிக் கொண்டு ரிஸ்க் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.


நவம்பர் 23, 2022 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் ஜென்ம குருவின் தாக்கம் மிகவும் அதிகமாக உணரப்படும். உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். உங்களுக்கு எதிரான சதிகளால் நீங்கள் உங்களுக்கு கிடைத்துள்ள நீண்ட கால ப்ரோஜெக்ட்டை இழக்க நேரலாம். மேலும் உங்கள் காப்புரிமையையும் நீங்கள் இழக்க நேரலாம். உங்களது புதுமையான யோசனைகள் மற்றும் வர்த்தக இரகசியங்கள் இந்த காலகட்டத்தில் திருடப்படலாம். உங்களுக்கு நிதி பிரச்சனைகளும் ஏற்படலாம். உங்கள் வணிக பங்குதாரர், போட்டியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் உங்களுக்கு கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். நீங்கள் உங்கள் அசையா சொத்துக்களை விற்று, மேலும் பணம் கடன் வாங்கி உங்கள் நிர்வாக செலவுகளை சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பெப்ரவரி மற்றும் மார்ச் 2023 வாக்கில் உங்கள் வணிகம் உங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தலாம்.

Prev Topic

Next Topic