![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | ஐந்தாம் பாகம் |
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகள் (25 / 100)
ஜென்ம குருவின் கடுமையான தாக்கத்தை இந்த பாகத்தில் உணருவீர்கள். இப்போது உங்களுக்கு 7½ ஆண்டு கால ஏழரை சனி காலம் தொடங்க உள்ளது. அனைத்து முக்கிய கிரகங்களும் – சனி பகவான், குரு, ராகு மற்றும் கேது சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், இந்த பாகம் உங்களுக்கு ஏமாற்றங்களையும் தோல்விகளையும் தரக்கூடியதாக இருக்கும். இந்த பாகத்தில் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி போகலாம். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே செயல்பட வேண்டும்.
உங்கள் குடும்பத்தினர்களுடன் நீங்கள் கடுமையான வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளில் ஈடுபட நேரலாம். தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீங்கள் உங்கள் உறவுகளை விட்டு பிரிய நேரலாம். காதலர்கள் வலி மிகுந்த காலகட்டத்தை சந்திப்பார்கள். உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உளவியல் ரீதியாகவும் நீங்கள் பாதிக்கப்படலாம்.
உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் இழக்க நேரலாம். ப்ராஜெக்ட் தோல்வி அடைந்தாள் அதற்கு நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் உங்கள் மீது பழி சுமத்தப்படலாம். உங்கள் மேலாளர் மற்றும் பிற ஊழியர்கள் முன் நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்படலாம். நீங்கள் இன்னும் மோசமான சூழலில் உங்கள் உத்தியோகத்தை விட்டுவிடலாம் என்றும் நிலைப்பீர்கள். தொழில்முனைவோர்கள் கடுமையான நிதி இழப்பை சந்திப்பார்கள். மேலும் மோசமான சூழலில் உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகும் சூழலும் ஏற்படலாம்.
பங்குச்சந்தை வர்த்தகம் அல்லது ரிஸ்க்கான நிதி சார்ந்த முடிவுகள் உங்களுக்கு நிதி இழப்பை பெரும் அளவு ஏற்படுத்தி விடலாம். இதனால் இந்த பாகத்தில் நீங்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை இழக்க நேரலாம். சட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், அதனால் உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Prev Topic
Next Topic