![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | முதல் பாகம் |
ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை அதிக சவால்கள் (40 / 100)
இந்த குரு பெயர்ச்சி காலத்தின் தொடக்கம் உங்களுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். ஏனென்றால், ராகு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிற்கும் கேது 8 ஆம் வீட்டிற்கும் சாதகமற்ற இடத்திற்கு பெயர்ச்சி ஆகின்றார்கள். மேலும் விடயங்களை மோசமாக்கும் விதத்தில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஏப்ரல் 27, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார். இது ஏழரை சனியின் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த மாதங்களில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டங்கள் இப்போது குறையும். விடயங்கள் திருப்பம் அடைந்து உங்களுக்கு எதிராக மாறும். நீங்கள் எதை செய்தாலும் அதில் பின்னடைவுகளையும் தாமதங்களையும் சந்திப்பீர்கள். இந்த பாகத்தில் கண் திருஷ்டி மற்றும் பொறாமை போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் மறைமுக எதிரிகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சதிகளை செய்வார்கள்.
உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள், மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்களிடம் புதிய தேவைகளை முன் வைப்பார்கள். நீங்கள் முன்பே சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிட்டிருந்தால், அது தள்ளிப்போடப்படலாம். அப்படியே அது நடந்தாலும் உங்களுக்கு அதிக மன அழுத்தம் மற்றும் செலவுகளை ஏற்படுத்தும். காதலர்கள் மற்றும் திருமணம் ஆன தம்பதியினர் தங்கள் சொந்த வாழ்க்கையில் அதிக சவால்களை சந்திப்பார்கள்.
அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் உங்கள் உத்தியோக வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உயர் நிர்வாகத்தில் இருப்பவர்கள் உங்கள் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். இதனால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். தொழில்முனைவோர்கள் எதிர்பாராத பின்னடைவுகளை சந்திப்பார்கள். முடிந்த வரை தொலைதூர பயணத்தை தவிர்த்து விடுங்கள். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் தாமதமாகலாம்.
Prev Topic
Next Topic