![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) உடல்நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | உடல்நலம் |
உடல்நலம்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
வரும் நாட்களில் உங்கள் உடல்நலத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நவம்பர் 2022 வரை உங்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை உங்கள் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் இரத்த கொதிப்பு, கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரையின் அளவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது அதிக கவனம் தேவை. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கேது உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மனக் கவலை, தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் புகை மற்றும் மது போன்ற தீய பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகலாம். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கும். நீங்கள் அதிகம் தனிமையாக இருப்பது போல உணருவீர்கள், மேலும் உங்கள் மனம் ஒரு நிலையாக இல்லாமல் இருப்பது போல உணருவீர்கள். நீங்கள் கட்டுப்பாடு இல்லாமல் சூதாட்டத்தில் ஈடுபடுவீர்கள். தேவைப்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic