குரு பெயர்ச்சி (2022 - 2023) பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் பயணம் மற்றும் குடியேற்றம் சார்ந்த விடயங்களில் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெற்றிருப்பீர்கள். இப்போது குரு மற்றும் ராகு சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் முடிந்த வரை பயணத்தை தவிர்த்துவிட வேண்டும். வெளிநாட்டில் உங்களுக்கு நண்பர்கள் இல்லாததால் அதிக தனிமையை உணருவீர்கள். போதிய சமூக வாழ்க்கை இல்லாததால் நீங்கள் உங்கள் மன நிம்மதியை இழப்பீர்கள். மேலும் இது உங்களுக்கு மன அழுத்தத்தையும் தரும். போதிய திட்டமிடுதல் இல்லாததால் பயண செலவுகள் விண்ணைத்தொடும் அளவு அதிகரிக்கும்.


நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு விசா சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் H1B விரிவாக்கம் RFE இடம் தேக்கம் அடையலாம். கிரீன் கார்டு மற்றும் குடியுரிமைப் பெரும் விடயங்களில் உங்களுக்கு கடுமையான நேரம் நிலவலாம். மேலும் மோசமான சூழலில் நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து மார்ச் 2023 வாக்கில் உங்கள் தாய்நாடு திரும்பும் சூழல் ஏற்படலாம்.

Prev Topic

Next Topic