குரு பெயர்ச்சி (2022 - 2023) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றன. எனவே இந்த குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் தரக்கூடிய காலமாக இருக்கும். உங்கள் குழந்தைகள் உங்கள் குடும்பத்திற்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் மகன் மற்றும் மகள் திருமணத்தை நிச்சயம் செய்ய இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்தும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.


உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் கனவு சுற்றுலாவிற்குச் செல்ல திட்டமிடலாம். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் கனவு இல்லத்தை வாங்குவீர்கள். புது வீட்டிற்கு குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் வேறு நகரம் அல்லது நாட்டில் வாழ்பவராக இருந்தால், உங்கள் பெற்றோர்கள் உங்களைப் பார்க்க வருகைத் தருவார்கள். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பாகம் 2 இல், ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சில தாமதங்கள் ஏற்படலாம். ஆனால் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மற்ற பாகங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள்.

Prev Topic

Next Topic