குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை வேலை பளுவுடன் அதிர்ஷ்டங்கள் (80 / 100)


ஜனவரி 17, 2023 முதல் உங்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அர்தஷ்டம சனி காலம் தொடங்கும். ஏனெத விதமான எதிர்மறை தாக்கங்களும் இப்போது நிகழாது. குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும் ராகு 6 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் சிறப்பாக உள்ளது. நீங்கள் இந்த பாகத்தில் நல்ல அதிர்ஷ்டங்களை காண்பீர்கள். உங்களுக்கு அர்தஷ்டமா சனி தொடங்கி உள்ளதால், நீங்கள் கடினமாக உழைத்து உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை முடிக்க முயற்சி செய்ய வேண்டும். ஆனால், உங்களுக்கு கொடுத்திருக்கும் வேலையை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலும் இந்த பாகத்தில் உங்களுக்கு வெகுமதிகளும் கிடைக்கும்.
உங்களுக்கு தூக்கம் சற்று பாதிக்கலாம். நீங்கள் அதிக நார் சத்து மற்றும் புரத சத்து இருக்கும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்ப சூழல் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். புது வீடு வாங்க இது நல்ல நேரம். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த பதவி உயர்வு இப்போது உங்களுக்கு கிடைக்கும். உங்கள் நிதி நிலை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். பண வரத்து போதுமான அளவு இருக்கும். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபம் தருவதாக இருக்கும். ஆனால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். உங்களுக்கு கிடைத்துள்ள நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் உத்தியோகத்தில் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic