குரு பெயர்ச்சி (2022 - 2023) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

நிதி / பணம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும், ராகு 6 ஆம் வீட்டிலும், மற்றும் சனி பகவான் 3 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ராஜ யோகம் உண்டாகும். நீங்கள் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு பண மழையைப் எதிர்பார்க்கலாம். அக்டோபர் 2022 முதல் ஜனவரி 2023 வரை உங்களுக்கு விண்ணைத் தொடும் அளவு லாபம் கிடைக்கும். பண வரத்து பல வழிகளில் இருந்தும் வரும். முந்தைய நிறுவனத்தில் இருந்தும், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்தும் அல்லது வழக்குகளில் இருந்தும் உங்களுக்கு நல்ல செட்டில்மென்ட் தொகை கிடைக்கும். நீங்கள் உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளியில் வந்துவிடுவீர்கள்.


உங்கள் வங்கிக் கடன்கள் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெற்றுவிடும். எந்த தேவையற்ற செலவுகளும் இருக்காது. நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுக்கு தங்க நகைகள் வாங்குவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் சேமிப்பு கணக்கில் போதுமான பணம் இருப்பு இருப்பதால் மிகவும் பாதுகாப்பாக உணருவீர்கள். உங்கள் கனவு இல்லத்திற்கு குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அக்டோபர் 29, 2022 முதல் ஜனவரி 3௦, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம், புது கார் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள இது நல்ல நேரம்.

Prev Topic

Next Topic