குரு பெயர்ச்சி (2022 - 2023) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரை பொற்காலம் (100 / 100)


100க்கு 100 பெறுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையிலே இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்த அதிகப்படியான வாய்ப்பு முக்கிய கிரகங்கள் சிறப்பான நிலையில் முழு பலத்துடன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கிடைத்துள்ளது. இது ஒரு விருது பெரும் பாகமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும். நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களை நிச்சயம் காண்பீர்கள். அப்படி உங்களால் காண முடியவில்லை என்றால், அது உங்கள் பிறந்த சாதகத்தால் மட்டுமே இருக்க முடியும்.
உங்கள் வாழ்க்கையில் உடல்நலம், குடும்பம், உறவுகள், உத்தியோகம், வணிகம், நிதி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் என்று அனைத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் ஊடகம், விளையாட்டு அல்லது அரசியல் போன்ற துறையில் இருந்தால், உங்களுக்கு நல்ல புகழ் கிடைத்து நீங்கள் ஒரு பிரபலமாகும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் படம் இந்த காலகட்டத்தில் வெளியில் வந்தால், அது பெரும் அளவு வெற்றியைப் பெரும்.


ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தில் நீங்கள் நிச்சயம் விண்ணைத்தொடும் லாபத்தை காண்பீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் பணக்காரராவீர்கள். பண மழை உங்களுக்கு நிச்சயம் பொழியும். உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள், அதிர்ஷ்ட்ட சீட்டு, சூதாட்டம் அல்லது வழக்கு அல்லது இன்சூரன்ஸ்சில் இருந்து கிடைக்கும் செட்டில்மென்ட் தொகை போன்றவற்றால் நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை பற்றிக் கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிட முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் நேரம் மற்றும் பணத்தை முடிந்த வரை நற்காரியங்கள், தானம் போன்றவற்றிற்கு செலவு செய்ய முயற்சி செய்யலாம்.



Prev Topic

Next Topic