![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2022 – 2023 விருச்சிக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் (Scorpio Moon Sign)
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் ராகு உங்கள் ஜென்ம ராசியிலும் கேது களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் கலந்த பலன்களைப் பெறுவீர்கள். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் கடந்த ஆண்டு நல்ல மாற்றங்களை பெற்றிருப்பீர்கள்.
இப்போது மேலும் அடுத்த ஒரு ஆண்டுக்கு உங்கள் வளர்ச்சி மேலும் விரைவாக அதிகரிக்கும். உங்கள் அதிர்ஷ்டங்கள் பல மடங்கு அதிகரிக்கும். நீங்கள் கோச்சார கிரகங்களின் அடிப்படையில் அனைத்து 12 ராசிகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிக பலத்தைப் பெறுவீர்கள். அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு நீங்கள் பொற்காலத்தைப் பெறுவீர்கள்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து இருக்கும். நீங்கள் அடுத்த நிலைக்கு எளிதாக பதவி உயர்வைப் பெறுவீர்கள். உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயருவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபத்தை தரும்.
ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு மிதமான பின்னடைவுகள் ஒரு குறுகிய காலத்திற்கு ஏற்படலாம். ஆனால் இந்த குரு பெயர்ச்சியின் பெரும்பாலான காலங்கள் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகிவிட முயற்சி செய்யுங்கள். எனேட்ரால், மே 2023 முதல் அர்தஷ்டம சனி தொடங்குவதால் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள.
Prev Topic
Next Topic