குரு பெயர்ச்சி (2022 - 2023) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை நல்ல அதிர்ஷ்டங்கள் (80 / 100)


சனி பகவான் அக்டோபர் 23, 2022 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் சனி பகவான் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். உங்களுக்கு சமீப நாட்களில் ஏற்பட்ட சிறு பின்னடைவுகள் இப்போது முடிவுக்கு வரும். உங்கள் வளர்ச்சியில் மேலும் வேகம் அதிகரிக்கும். உங்கள் நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் வெற்றிப் பெரும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை அடைவீர்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலனைப் பெறுவார்கள். நீங்கள் உங்கள் உயர் நிவாகத்துடன் நெருக்கமாவீர்கள். உங்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் போன்ற பலன்களைப் பற்றி பேச இது சிறப்பான நேரமாக இருக்கும். உங்கள் பண வரத்து போதுமான அளவு இருக்கும். புது வீடு வாங்க இது நல்ல நேரம். மேலும் உங்கள் வீட்டை புதுபிக்கும் முயற்சிகளை செய்யவும் இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகளையும் பெரும்.


நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். உங்களது நீண்ட கால பங்குகள் மற்றும் கிரிப்டோ முதலீடுகள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தரும். உங்கள் விசா, கிரீன் கார்டு, குடியுரிமை மற்றும் OCI கார்டு விண்ணப்பங்களில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள்.


Prev Topic

Next Topic