குரு பெயர்ச்சி (2022 - 2023) பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

பயணம் செய்ய இது சிறப்பான நேரம். நீங்கள் விரும்பும் இடத்திற்கு அல்லது உலக சுற்றுலா செல்லவும் சாலை வழிப் பயணம் செய்யவும் திட்டமிடலாம். உங்களுக்கு பயண சீட்டு, தங்கும் விடுதி மற்றும் வாடகைக்கு கார் போன்ற விடயங்களில் நல்ல சலுகைகள் கிடைக்கும். நீங்கள் குடும்பத்தினர்களுடன் சுற்றுலா செல்வதாலும், வணிகம் சார்ந்த பயணம் செய்வதாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு செல்லும் இடங்களில் நல்ல தங்கும் வசதிகள் கிடைக்கும். பயணத்தின் போது நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். புது கார் வாங்க இது நல்ல நேரம்.


நிலுவையில் இருக்கும் குடியேற்றப் பலன்கள் அக்டோபர் 2022 வாக்கில் ஒப்புதல் பெரும். நீங்கள் முன்பே கனடா அலல்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடியேற்றத்திற்கான விசாவை விண்ணப்பித்திருந்தால், இப்போது அது இந்த குரு பெயர்ச்சியின் தொடக்கத்தில் ஒப்புதல் பெற்றுவிடும். வெளிநாட்டிற்கு பெயர்வதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய உங்கள் தாய்நாட்டிற்கு செல்லலாம். EAD, கிரீன் கார்டு, குடியுரிமை மற்றும் OCI போன்ற நீண்ட கால பலன்களையும் நீங்கள் அக்டோபர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் பெற்றுவிடுவீர்கள்.


Prev Topic

Next Topic