![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
கடந்த ஒரு ஆண்டு காலமாக சனி பகவானின் பலத்தால் நீங்கள் ஓரளவு நல்ல வளர்ச்சியைப் பெற்றிருப்பீர்கள். சனி பகவான், குரு மற்றும் ராகு இப்போது நல்ல நிலையில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும் வெற்றியையும் அதிகரிப்பார்கள். அடுத்த ஒரு ஆண்டு காலம் உங்களுக்கு பொற்காலமாக இருக்கும். நீங்கள் சிறிய நிறுவனத்தில் நீண்ட காலமாக இருந்தால், இப்போது பெரிய நிறுவனத்தில் சிறந்த வேலை வாய்ப்புடன் நல்ல சம்பளமும் பெற முயற்சிக்க இது நல்ல நேரமாக உள்ளது.
உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீங்கள் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டுகளில் வேலை பார்ப்பீர்கள். நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த பதவி உயர்வு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு ஒப்புதல் பெரும். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து இருக்கும். எந்த மறைமுக எதிர்களும் சதிகளும் உங்களுக்கு இருக்காது. நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் ஒரு சுமூகமான சூழலை காண்பீர்கள்.
வெளிநாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரமாக உள்ளது. நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்றால், அக்டோபர் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு அது கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அலுவலகத்தில் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய இடத்தில் உங்களுக்கு இடமாற்றம், குடியேற்றம், போன்ற பலன்களை உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic