குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை வேலை பளு இருக்கும் ஆனால் நிதி நிலையில் வெற்றி (75/100)



சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகி உங்களுக்கு இந்த பாகத்தில் வேலை பளுவை அதிகரிப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டை பார்வை இடுவதால் உங்களுக்கு தூக்கம் பாதிக்கலாம். குரு மற்றும் கேதுவின் பலத்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலை நீங்கள் சமாளித்துவிடுவீர்கள். மேலும் உங்கள் ப்ரொஜெக்ட்டையும் நீங்கள் சரியான நேரத்தில் முடித்துவிடுவீர்கள். குருவின் பலத்தால் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற வெகுமதிகளையும் நீங்கள் பெறுவீர்கள். இந்த பாகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளது.




புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். பங்குச்சந்தை முதலீடுகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்த இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நன்மதிப்பையும் நற்பெயரையும் பெரும். சட்ட பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். பயணம் செய்த இது நல்ல நேரம். வேறு நாட்டிற்கு குடிபெயரவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகிவிட முயற்சி செய்யுங்கள்.

Prev Topic

Next Topic