குரு பெயர்ச்சி (2022 - 2023) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

நிதி / பணம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

கடந்த ஆண்டு குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சியால் உங்கள் நிதி நிலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்திருக்கும். இப்போது விடயங்களில் பெரும் அளவு முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை இந்த குரு பெயர்ச்சி காலத்தில் ஏப்ரல் 2023 வரை நல்ல முன்னேற்றத்தைப் பெரும்.


பாகம் 1, 4 மற்றும் 4 இல் பண வரத்து பல வழிகளில் இருந்தும் உண்டாகும். குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் கேது 6 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டங்களை பல மடங்கு அதிகரிப்பார்கள். நீங்கள் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்தும் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த விடயங்களில் இருந்தும் உங்களுக்கு செட்டில்மென்ட் கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்கள் சேமிப்பு கணக்கில் போதிய பண இருப்பு இருக்கும்.
உங்கள் வங்கிக் கடன்கள் விரைவாக ஒப்புதல் பெரும். மேலும் உங்கள் வீட்டுக் கடனை நிதி மறு பரிசீலனைச் செய்யவும் இது நல்ல நேரம். உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிப்பதாலும் கடன்கள் இல்லாததாலும் நீங்கள் மன நிம்மதியோடு இருப்பீர்கள் மேலும் நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள். உங்கள் கனவு இல்லத்திற்கு குடி பெயர்வதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிர்ஷ்ட்ட சீட்டு மற்றும் சூதாட்டம் பாகம் 4 இல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தரும். பாகம் 2 மற்றும் 4 இல் நீங்கள் அதிக பணத்தை செலவு செய்ய நேரலாம். ஆனால் உங்கள் வருமானம் அதிகரிப்பதால் உங்களால் செலவுகளை சமாளித்து விட முடியும்.

Prev Topic

Next Topic