![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | முதல் பாகம் |
ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை விண்ணைத்தொடும் லாபம் (80 / 100)
குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் இந்த பாகத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிற்கு பின்னோக்கி பெயர்ந்தும், கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரித்தும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களை பல மடங்கு அதிகரிப்பார்கள். திருமணம், புதுமனை புகு விழா போன்ற சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறப்பான நேரமாக இருக்கும். உங்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் செல்வாக்கும் கிடைக்கும்.
உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உறவினர்களுடனும் உங்களுக்கு நல்ல உறவு உண்டாகும். உங்கள் கடின உழைப்பிற்கேற்ற வெகுமதிகளும் பாராட்டுகளும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் ஏற்படும் லாபம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பண வரத்து பல வழிகளில் இருந்தும் வரும். புது வீடு வாங்க அல்லது சொத்துக்களில் முதலீடு செய்ய இது நல்ல நேரம். பங்குச்சந்தை முதலீடுகள் அல்லது கிர்ப்டோ நாணயம் உங்களுக்கு நல்ல லாபத்தை உண்டாக்குவதோடு பண மழையையும் பொழியும்.
உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெற்றுவிடும். உங்களுக்கு வெளிநாட்டிற்கு பணி அல்லது சுற்றுலா காரணமாக பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டங்களை மகிழ்ச்சியோடு கொண்டாட உங்களை நீங்கள் அலுவலகத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
Prev Topic
Next Topic