![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரை நல்ல அதிர்ஷ்டங்கள் (90/100)
அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் இந்த பாக காலகட்டத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களை உண்டாக்குவார்கள். இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். நீங்கள் எதை செய்தாலும் அதில் பெரும் அளவு வெற்றியைப் பெறுவீர்கள். உங்களுக்கு பண மழை பொழியும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் உடல்நலம், குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும்.
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை கண்டறிந்து திருமணம் செய்து கொள்ள இது சிறப்பான நேரமாக உள்ளது. திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். IVF போன்ற மருத்துவ சிகிசையை செய்து கொள்ள நீங்கள் திட்டமிடலாம்.
உங்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புது வேலை வாய்ப்பு, இடமாற்றப் பலன்கள் போன்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு ஏற்படும் விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளியில் வந்துவிடுவீர்கள். புது வீடு வாங்குவது மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வது போன்ற விடயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
பயணம் நல்ல அதிர்ஷ்டங்களைத் தரும். உங்களுக்கு வெளிநாட்டிற்கு செல்ல எளிதாக விசா கிடைத்துவிடும். வெளிநாட்டிற்கு குடிபெயரவும் உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளது. பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு நல்ல பண வரத்தை ஏற்படுத்தும். மேலும் அதிர்ஷ்ட்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றையும் நீங்கள் முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic