![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
2022-2023 குரு பெயர்ச்சி பலன்கள் – Taurus– ரிஷபம். கடந்த 6 மாதங்களாக குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை மிகவும் மோசமாக பாதித்து இருந்திருப்பார். ராகு உங்கள் ஜென்ம ஸ்தானத்திலும், கேது களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரித்து கடந்த காலத்தில் உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி இருந்திருப்பார்கள்.
குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவது இப்போது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நல்ல முன்னேற்றத்தையும் பெரும் அளவு வெற்றியையும் காண்பீர்கள். ஜூலை 29, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை குரு வக்கிர கதி அடையும் காலத்தில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம்.
நீங்கள் எதை செய்தாலும் அதில் பெரும் அளவு வெற்றியைப் பெறுவீர்கள். மே, ஜூன், நவம்பர் மற்றும் டிசம்பர் 2022 மாதங்களில் உங்களுக்கு பண மழை பொழியும் வாய்ப்பும் உள்ளது. சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிடவும் இது ஏற்ற ஆண்டாக இருக்கும். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.
இந்த குரு பெயர்ச்சிப் பலன்களை ஐந்து பாகங்களாக பிரித்துள்ளேன். உங்களுக்கு கிடைத்துள்ள இந்த நேரத்தை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic