![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | இரண்டாம் பாகம் |
ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை பின்னடைவுகள் (40/100)
இந்த பாகத்தில் குரு வக்கிர கதி அடைந்த நிலையில் இருப்பார். சனி பகவானும் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு கடந்த சமீப நாட்களில் கிடைத்த அதிர்ஷ்டங்களில் பின்னடைவை ஏற்படுத்துவார். ராகு மற்றும் கேதுவின் பலத்தால் உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கக்கூடும் நீங்கள் போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பாகத்தில் சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்துவிடுங்கள். அது நல்ல யோசனையாக இருக்காது. காதலர்கள் தங்கள் வாழ்க்கையில் கடினமான நேரத்தை சந்திப்பார்கள். உங்கள் பெற்றோர்களிடம் இருந்து உங்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் வாங்குவது கடினமான ஒன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வேலை பளு அதிகரிக்கும். உங்களுக்கு தேவையற்ற பயமும் பதற்றமும் ஏற்படலாம். உங்கள் வெற்றி விகிதம் குறைவாக இருப்பதால் புது வேலை வாய்ப்புக்கு முயற்சிப்பதை தவிர்த்துவிடுங்கள்.
தொழில்முனைவோர்கள் பெரிய அளவில் அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்க முடியாது. முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் எதை செய்தாலும் அதில் தேக்கம் ஏற்படலாம். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகலாம். நீங்கள் இந்த பாகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பங்குச்சந்தை முதலீடுகளும் உங்களுக்கு சில இழப்புகளை ஏற்படுத்தலாம்.
Prev Topic
Next Topic