![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | மூன்றாம் பாகம் |
அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை கலந்த பலன்கள் (55/100)
சனி பகவான் அக்டோபர் 23, 2022 அன்று உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைந்து உங்களுக்கு இந்த பாகத்தில் நல்ல நிவாரணத்தை தருவார். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் கடந்த பாகத்தை விட குறைவாகவே இருக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலை பளு குறையும். நீங்கள் உங்களைச் சுற்றி நடக்கும் விடயங்களில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள், ஆனால் அது மெதுவான வேகத்திலேயே நடக்கும்.
உங்கள் மருத்துவ செலவுகள் சமாளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு ஏற்ற வரனை பார்க்க இது நல்ல நேரம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் உத்தியோகத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால், நீங்கள் புது வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்யலாம். தொழில்முனைவோர்கள் புதுமையான யோசனைகளை முன் கொண்டு வருவார்கள். அது மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும். உங்கள் வங்கிக் கடன்கள் இந்த பாகத்தில் ஒப்புதல் பெரும்.
பயணம் இப்போது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தரும். RFE அல்லது விசா சார்ந்த விடயங்கள் தேக்கம் அடைந்திருந்தால் அல்லது நிராகரிக்கப்பட்டிருந்தால், நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்க இது நல்ல நேரம். பங்குச்சந்தை முதலீடுகளில் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பில் இருந்து மீண்டு வருவீர்கள். இருப்பினும், ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை.
Prev Topic
Next Topic