குரு பெயர்ச்சி (2022 - 2023) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

வேலை / உத்தியோகம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

டிசம்பர் 2021 முதல் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் அதிக அரசியலையும், கடுமையான வாக்குவாதங்களையும் உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்களுடன் நீங்கள் சந்தித்திருந்திருப்பீர்கள். ராகு உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு கடந்த சமீபத்திய காலத்தில் மனக் கவலை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பார். இப்போது விடயங்கள் ஒரு திருப்பத்தை உங்களுக்கு சாதகமாகப் பெறப் போகிறது. உங்கள் அலுவலகத்தில் நடக்கப் போகும் எந்த மாற்றங்களாக இருந்தாலும், அது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்களால் உங்கள் குழுவை மாற்றியமைக்க முடியும். மேலும் உங்கள் மேலாளரிடம் இருந்தும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும்.


மேலும் புது வேலைக்கு விண்ணப்பிக்கவும் இது நல்ல நேரம். உங்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளத்துடனும் பதவியுடமும் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கையை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். மேலும் அது சிறப்பாகவும் இருக்கும். உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் இருந்து வாய்ப்புகளும் கிடைக்கும். நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வுக்காக காத்திருந்தால், அது இப்போது உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து நிகழ்த்து கொண்டே இருக்கும். எந்த மறைமுக எதிரிகளும் இருக்க மாட்டார்கள் மேலும் உங்களுக்கு எதிராக எந்த சதியும் இருக்காது. உங்கள் உத்தியோக வாழ்க்கை சுமூகமாகவே இருக்கும்.
வெளிநாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம். நீங்கள் விரும்பிய இடத்திற்கே உங்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். மேலும் உள்நாட்டு இடமாற்றம் மற்றும் குடியேற்றப் பலன்களும் உங்களுக்கு எளிதாக உங்கள் நிறுவனத்தில் இருந்து பாகம் 1, 4, மற்றும் 5 ஆம் பாகத்தில் கிடைத்துவிடும். குரு வக்கிர கதி அடைவதால், பாகம் 2 மற்றும் 3 இல் உங்கள் வளர்ச்சியில் வேகம் சற்று குறையலாம்.

Prev Topic

Next Topic