![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
சனி பகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் ஜனவரி 17, 2023 வரை சஞ்சரித்து உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவார். ஆனால் சனி பகவானின் தாக்கம் குரு உங்கள் ராசியின் களத்திற ஸ்தானத்தில் சஞ்சரிப்பதன் பலத்தால் குறைந்திடும். நீங்கள் உத்தியோகம் போன்ற காரணத்தால் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருந்தால், இப்போது மீண்டும் அவர்களுடன் சேர்ந்து வாழத் தொடங்குவீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குடும்பத்தினர்களுடன் உங்கள் பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படையாகி பேசி தீர்வு காண முயற்சிப்பீர்கள். இதனால் உங்கள் பிரச்சனைகளுக்கு உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். தற்போது நிகழும் குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பீர்கள். அக்டோபர் 23, 2022 வரை காத்திருந்தால், அதன் பின்னர் சனி பகவானால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் இருக்காது. அடுத்த 2023 ஆம் ஆண்டு சுப காரியங்கள் நிகழ்த்த சிறப்பான நேரமாக இருக்கும்.
பாகம் 1, 4 மற்றும் 5 இல் புது வீடு வாங்கி குடி பெயர நீங்கள் முயற்சிக்கலாம். மேலும் உங்கள் பெற்றோர்களை சென்று சந்திக்கவும் நல்ல நேரமாக உள்ளது. பாகம் 2 மற்றும் 3 இல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக சவால்களை உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் சந்திக்க நேரலாம்.
Prev Topic
Next Topic