![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | ஐந்தாம் பாகம் |
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை பொற்காலம் (95 / 100)
குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் சனி பகவான் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு இப்போது ராஜ யோகத்தை உண்டாக்குவார்கள். நீங்கள் எதை செய்தாலும் அதில் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த பாகத்தில் உங்களுக்கு திருமணம் நடக்கும். நீங்கள் காதலிக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் வாழ்க்கைக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள்.
சிறப்பான சம்பளத்துடன் அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களது விரைவான வளர்ச்சி, புகழ் மற்றும் வெற்றியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். உங்கள் வணிகத்தில் இருக்கும் வளர்ச்சி ஆச்சரியப்படும் வகையில் இருக்கும். உங்கள் தயாரிப்பு இப்போது சந்தைக்கு வந்தால், அது ஊடகத்தில் கவனத்தை ஈர்க்கும். உங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற வெகுமதிகளைப் பெறுவீர்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு விண்ணைத்தொடும் லாபத்தை தரும். நீங்கள் புது வீடு வாங்க அல்லது சொத்துக்களில் முதலீடு செய்ய முயற்சிக்கலாம். நீங்கள் முதலீடு செய்யும் பணம் உங்களுக்கு அடுத்த 2 – 3 ஆண்டுகளில் 2 – 3 மடங்கு லாபத்தை தரும். நீங்கள் உங்களால் முடிந்த தான தர்மங்களைச் செய்ய முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic