குரு பெயர்ச்சி (2022 - 2023) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை நல்ல அதிர்ஷ்டங்கள் (80 / 100)


குரு உங்கள் ஜென்ம ராசியை களத்திர ஸ்தானத்தில் இருந்து பார்வை இடுவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சனி பகவான் உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 28, 2022 அன்று அதி சரமாய் பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் ஜூன் 5, 2022 அன்று வக்கிர கதி அடைந்து மீண்டும் மகர ராசிக்கு ஜூலை 14, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார். நீங்கள் உங்களுக்கு கடந்த நாட்களில் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வந்துவிடுவீர்கள்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்குக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை கிடைப்பார். அலுவலகத்தில் நீங்கள் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது நல்ல நேரம். உங்களுக்கு சிறப்பான சம்பளத்துடன் பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.


உங்கள் நிதி நிலையில் பெரும் ஆளவு முன்னேற்றம் ஏற்படும். பண வரத்து பல வழிகளை இருந்தும் வரும். இந்த பாகத்தில் பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கும். வங்கிக் கடன் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெரும். புது வீடு வாங்க இது நல்ல நேரம். உங்களுக்கு வெளிநாட்டிற்கு பயணம் செய்ய விசா கிடைக்கும். வெளிநாட்டிற்கு குடிபெயரவும் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.


Prev Topic

Next Topic