குரு பெயர்ச்சி (2022 - 2023) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரை சிறப்பான முன்னேற்றம் (70 / 100)


நவம்பர் 24, 2022 ஐ அடைந்ததும் உங்களது மோசமான காலகட்டம் முடிந்துவிடும். அடுத்த சில வாரங்களுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை சீரணிக்க நேரம் கிடைக்கும். ஆனால், இந்த பாகத்தில் உங்களுக்கு மிகவும் விரைவான நிவாரணமும் கிடைக்கும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை மீண்டும் பெறுவீர்கள். நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிந்து இருந்தாலும், மீண்டும் ஒரு புதிய உறவைத் தொடங்க தயாராக இருப்பீர்கள். மீண்டும் நீங்கள் ஒன்று சேர்ந்து உங்கள் வாழ்க்கையைத் தொடங்கவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து உங்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். கடந்த சமீப நாட்களில் நடந்த நிகழ்வுகளில் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். உங்கள் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் மீண்டும் பெறுவீர்கள். உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த நிலைக்கு உயர உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். நீங்கள் புதிய வேலை வாய்ப்புக்கும் முயற்சி செய்யலாம். உங்கள் வணிக வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.


அதிகரிக்கும் பண வரத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்க இது நல்ல நேரம். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சூதாட்டம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களை இந்த பாகத்தில் பணக்காரராகவும் மாற்றலாம். மேலும் நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, சற்று ஓய்வு எடுத்து மீண்டும் உங்கள் சக்தியை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கலாம். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.


Prev Topic

Next Topic