குரு பெயர்ச்சி (2022 - 2023) உடல்நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

உடல்நலம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

உங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மன உளைச்சல்களால் நீங்கள் மிகவும் அதிகமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் உடலில் எதிர்பாராமல் அதிகரிக்கும் கொழுப்பு சத்தின் அளவு, இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு உங்கள் நிலையை மேலும் மோசமாக்கி இருந்திருக்கும். இது உங்களை வருத்தம் அடையச் செய்திருக்கும். குரு இப்போது உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் நீங்கள் சரியான சிகிச்சை கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். அனைத்தும் இயல்பான நிலைக்கு வரும். குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால் உங்களுக்கு இருக்கும் மன உளைச்சலில் இருந்தும் நீங்கள் வெளியில் வருவீர்கள்.


உங்கள் குடுபத்தினர்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி செய்து உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்வீர்கள். பாகம் 2 மற்றும் 3 இல் சில பின்னடைவுகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தினமும் காலையில் ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் உங்களுக்கு மனதிலும் உடலிலும் பலம் அதிகரிக்கும்/ சுதர்சன மகா மந்திரத்தை கேட்கவும் முயற்சி செய்யுங்கள்.

Prev Topic

Next Topic