குரு பெயர்ச்சி (2022 - 2023) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

2022 – 2023 கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்


குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சனி பகவான் 5 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கி இருந்திருப்பார்கள். உங்களுக்கு கடந்த சமீப நாட்களில் ஏற்பட்டுள்ள உடல் உபாதைகள், மன உளைச்சல்கள் மற்றும் பின்னடைவுகளைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இருக்காது. இப்போது குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீடான களத்திற ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவது உங்களுக்கு ஒரு நற்செய்தியாக இருக்கும். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகள் குறையும். நீங்கள் உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நவம்பர் 24, 2022 வரை உங்கள் வளர்ச்சி மிதமாகவே இருக்கும்.
ஆனால் நவம்பர் 24, 2022 முதல் ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் பொற்காலத்தை காண்பீர்கள். உங்கள் நீண்ட கால ஆசைகளும் கனவுகளும் நினைவாகும். உங்கள் உடல் நலம் இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும். சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறந்த நேரமாக இருக்கும். உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் விண்ணைத் தொடும் அளவு வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் பண வரத்து போதுமான அளவு இருக்கும். புது வீடு வாங்கி நீங்கள் நல்ல நிலையில் செட்டிலாவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல புகழையும் பெயரையும் பெரும்.
பாகம் 3 இல் 5 வாரங்களுக்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கிடைக்கும் நல்ல நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த தான தர்மங்களைச் செய்ய முயற்சி செய்யுங்கள்.

Prev Topic

Next Topic