![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | இரண்டாம் பாகம் |
ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை கலந்த பலன்கள் (60 / 100)
குரு மற்றும் சனி பகவான் இந்த பாகத்தில் வக்கிர கதி அடைவார்கள். உங்களுக்கு இதனால் கலந்த பலன்கள் கிடைக்கும். கடந்த பாகத்தில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இப்போது சற்று குறையலாம். ஆனால் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். நீங்கள் உங்களிடம் இருப்பவற்றை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ரிஸ்க் எடுக்க, உங்கள் உத்தியோகத்தில் மாற்றம் செய்ய அல்லது முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை.
உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதனை செய்திட முயற்சி செய்வீர்கள். நீங்கள் திருமணம் செய்ய திட்டமிட்டால், கவனமாக இருக்க வேண்டும். டிசம்பர் 2022 வரை காத்திருந்து அதன் பின்னர் நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்யலாம்.
உங்கள் உத்தியோக அழுத்தம் சுமாராக இருக்கும். பண வரத்து சிறப்பாக இருக்கும். உங்களால் உங்கள் நிதித் தேவைகளை சமாளிக்க முடியும். ஆனால் புது வீடு வாங்க இப்போது ஏற்ற நேரமாக இல்லை. நீங்கள் பயணம் செய்யலாம். புண்ணிய தளங்களுக்கு சென்று வர முயற்சிக்கலாம். இந்த பாகத்தில் பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic